பதிவு செய்த நாள்
23 மே2012
12:39
ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரொனல்டு நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், பல்ஸ் டீஸல் காரை அறிமுகப்படுத்தியது. உடனடியாக இந்த கார் விற்பனைக்கும் வந்தது. தற்போது, பல்ஸ் பெட்ரோல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 சிலிண்டர், 1198 சிசி, 12 வால்வ் யூனிட் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு, 18.06 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.4.25 லட்சத்தில் இருந்து ரூ.5.55 லட்சம் வரை உள்ளது. ஆறு வண்ணங்களில் கிடைக்கும். 2 பிளஸ் 2 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ., இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை, வாரன்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|