பதிவு செய்த நாள்
29 மே2012
10:14

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 83.20 புள்ளிகள் அதிகரித்து 16500.04 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.70 புள்ளிகள் அதிகரித்து 5005.35 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான, நேற்று நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து, கிரீஸ் வெளியேறாது என்ற கருத்தால், ஐரோப்பிய நாடுகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.60ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|