தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... நோக்கியா போன் விலை குறைப்பு நோக்கியா போன் விலை குறைப்பு ...
சோனி எக்ஸ்பீரியா பி - முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
13:25

சோனி நிறுவனத்தின் புதிய மொபைல் போன் எக்ஸ்பீரியா - பி (Sony Xperia P) வாங்கிட விரும்புவோர், Flipkart இணையதளம் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்ற 2012 பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில், சோனி இந்த மொபைல் போனை அறிமுகம் செய்தபோது, பலரும் இதனை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் மொபைல் பிரேவியா இஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே ஒயிட் மேஜிக் டிஸ்பிளே தொழில் நுட்பத்தின் மூலம் தரப்படுகிறது. வேறு எந்த மொபைல் போனிலும் இந்த வகையான டிஸ்பிளே கிடைப்பதில்லை. சோனி நிறுவனத்தின் தனிச் சிறப்பான திரைக்காட்சியாக இது உள்ளது. இதில் இடத்தை எடுத்துக்காட்டும் ஜியோ டேக்கிங் வசதி உள்ள, 8 எம்பி திறன் கொண்ட, ஆட்டோ போகஸ் கேமரா தரப்பட்டுள்ளது. கூடுதலாக, வீடியோ அழைப்பிற்கென விஜிஏ கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் இயக்க வேகம் கொண்ட டூயல் கோர் ப்ராசசராகும். இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இயங்குகிறது. இதனை அடுத்த பதிப்பு 4க்கு உயர்த்திக் கொள்ளலாம். 3G HSDPA 14.4 Mbps; HSUPA 5.76 Mbps,, Wi-Fi, DLNA, Bluetooth, NFC, aGPS என அனைத்து வகையான நெட்வொர்க்கிங் தொழில் நுட்பங்களும் இதில் கிடைக்கின்றன. இதன் உள் நினைவகம் 16 ஜி.பி. ராம் நினைவகம் 1 ஜிபி. பேட்டரி 1305mAh திறன் கொண்டது. இந்த போனை இணைய தளத்தின் மூலம் முன் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் பதிவு விலை ரூ. 24,499. பதிந்தவர்களுக்கு மறு வாரத்தில் இது அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)