பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:29

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக,நிறுவனங்கள் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 2,550 கோடி டாலராக (1 லட்சத்து 40 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது,கடந்த 2011ம் ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்டதை விட,26 சதவீதம் குறைவாகும் என, சர்வதேச ஆய்வு நிறுவனமான, டைலாஜிக் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி:சர்வதேச அளவில், ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, மூலப் பொருட்களின் விலை உயர்வு,வட்டி செலவினம் அதிகரித்துள் ளது போன்றவற்றால்,பல நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாப வளர்ச்சி மிகவும் குறைந்து போயுள்ளது.இதுபோன்ற காரணங்களால், நடப்பாண்டில், இதுவரையில் நிறுவனங்களிடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள், மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் மிகவும் குறைந்துள்ள தாக தெரியவந்துள்ளது.
தொழில் நுட்பம்:ஒரு நிறுவனத்தை புதிதாக துவங்கி, அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதை விட, ஏற்கனவே உள்ள ஒரு நிறுவனத்தை கையகப்படுத்து வதன் மூலம்,அத்துறையில்,சிறந்து விளங்க முடியும். குறிப்பாக, திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல சாதகமான அம்சங்களால், பல நிறுவனங்கள், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றன.
நடப்பு 2012ம் ஆண்டின் ஜூன் 22ம் தேதி வரையிலுமாக, மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல் நடவடிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது, கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைந்த அளவா கும்.நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல் நட வடிக்கை மதிப்பு, 370 கோடி டாலராக (20 ஆயிரத்து 350 கோடி ரூபாய்) இருந்தது.
மதிப்பு:அதேசமயம், நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி -மார்ச்), இதன் மதிப்பு, 2,180 கோடி டாலராக (1 லட்சத்து 19 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) இருந்தது. கடந்த 2011ம் ஆண்டின், நான்காவது காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையை விட, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், இதன் மதிப்பு, சற்று குறைந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்திய நடவடிக்கைகள், நடப்பாண்டு, ஜூன் 22ம் தேதி வரையிலுமாக, 270 கோடி டாலராக (14 ஆயிரத்து 850 கோடி ரூபாய்) உள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே காலத்தில், 640 கோடி டாலராக (35 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இருந் தது.அதேசமயம், உள்நாட்டிற்குள் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, இதே காலத்தில், 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, நடப்பாண்டில் இதுவரையிலுமாக, உள்நாட்டிற்குள் நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப் படுத்தல் மதிப்பு, 2,950 கோடி டாலராக (1 லட்சத்து 62 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, டை லாஜிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேசகோவா நிறுவனம்:உள்நாட்டிற்குள், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையில்,பெரிய அள வில், ஸ்டெர்லைட் நிறுவனம், சேசகோவா நிறுவனத்தை இணைத்து கொண்டது. இதன் மதிப்பு,950 கோடி டாலரா கும் (52 ஆயிரத்து250கோடிரூபாய்).இதுதவிர,கெய்ரன் இந்தியா, மெட்ராஸ் அலுமினியம், வேதாந்தா ரிசோர்சஸ் ஆகிய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மிகப் பெரிய அளவில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|