பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
14:48

கார் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையிலும் நுழைந்துள்ளது. தற்போது அந்த நிறுவனம், துரோ டிஇஸட் என்ற 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்தூர் அருகே பீதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு, 10 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. துரோ ஸ்கூட்டர், வயதானவர்களை கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை, 3.5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, "ரோடியோ ஆர்இஸட்' என்ற புதிய 12 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. துரோ ஸ்கூட்டரை விட, புதிய ஸ்கூட்டர், ரூ.2.500 விலை அதிகம். தமிழகத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.50,710 என்ற விலைக்கு கிடைக்கும். இந்த ஸ்கூட்டர், லிட்டருக்கு, 59.38 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரோ ஸ்கூட்டர் தற்போது மாதத்துக்கு, 10, 000 ஸ்கூட்டர் என்ற அளவில் விற்பனையாகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|