பதிவு செய்த நாள்
29 ஜூன்2012
00:18

புதுடில்லி:நடப்பு ஜூன் மாதம் 11 முதல், 20ம் தேதி வரையிலான, பத்து தினங்களில், ரயில்வே வருவாய், 3,282 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டு, ஜூன் மாதத்தின், இதே பத்து தினங்களில், ஈட்டிய வருவாயை விட, 23.16 சதவீதம் (2,665 கோடி ரூபாய்) அதிகமாகும் என, ரயில்வே அமைச்சகத்தின் உத்தேச மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் வாயிலாக கிடைத்த வருவாய், 29.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,801 கோடி ரூபாயிலிருந்து, 2,331 கோடி ரூபாயாகவும், பயணிகள் வாயிலான வருவாய், 10.32 சதவீதம் வளர்ச்சியடைந்து, 757 கோடி ரூபாயி லிருந்து, 835 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இதர வகையிலான வருவாய், 13.84 சதவீதம் உயர்ந்து, 71 கோடி ரூபாயிலிருந்து, 81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|