தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு ... "வண்ணமே' வரத்து உயர்வால் இறால் விலை வீழ்ச்சி "வண்ணமே' வரத்து உயர்வால் இறால் விலை வீழ்ச்சி ...
சென்ற 2011-12ம் நிதி ஆண்டில் நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.9,783 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
04:17

கொச்சி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நறுமண பொருட்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, மதிப்பின் அடிப்படையில், 43 சதவீதம் வளர்ச்சிகண்டு, 9,783 கோடி ரூபாய் என்றளவில் அதிகரித்துள்ளது.இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 6,841 கோடி ரூபாயாக இருந்தது என, நறுமணபொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாலர் மதிப்பு:இதே நிதியாண்டுகளில், அளவின் அடிப்படையில் நறுமணபொருட்கள் ஏற்றுமதி, 9 சதவீதம் அதிகரித்து, 5 லட்சத்து 25 ஆயிரத்து 750 டன்னிலிருந்து, 5 லட்சத்து 75 ஆயிரத்து 270 டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில், நறுமண பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 6,500 கோடி ரூபாய்க்கும், அளவின் அடிப்படையில், 5 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்ய, இவ்வாரியம் இலக்கு நிர்ணயித்திருந்தது.சர்வதேச அளவில், இந்திய நறுமணபொருட்களுக்கு, அதிக தேவைப்பாடு உள்ளது. மதிப்பின் அடிப்படையில் இவற்றின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 16 சதவீதம் என்றளவில் உள்ளது.
இதை தொடர்ந்து, சீனா (9 சதவீதம்), ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மலேசியா (தலா 6 சதவீதம்), சவுதி அரேபியா, ஜெர்மனி, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து (தலா 4 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதியில், நறுமண பொருட்களின், "ராணி' என்றழைக்கப்படும் ஏலக்காயின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
ஏலக்காய்:சிறிய வகை ஏலக்காய், ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில், 175 சதவீதம் வளர்ச்சிகண்டு, 132 கோடியிலிருந்து, 363 கோடி ரூபாயாகவும், ளவின் அடிப்படையில், 296 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,175 டன்னிலிருந்து, 4,650 டன்னாகவும் அதிகரித்துள்ளது.பெரிய வகை ஏலக்காய் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 53 சதவீதம் உயர்ந்து, 44 கோடியிலிருந்து, 68 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், 21 சதவீதம் வளர்ச்சியடைந்து, 775 டன்னிலிருந்து, 935 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மிளகு ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 42 சதவீதம் வளர்ச்சிகண்டு, 383 கோடியிலிருந்து, 878 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 129 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரத்து 850 டன்னிலிருந்து, 26 ஆயிரத்து 700 டன்னாகவும் உயர்ந்துள்ளது.
மிளகாய் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 40 சதவீதம் உயர்ந்து, 1,535 கோடியிலிருந்து, 2,144 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 2 லட்சத்து 40 ஆயிரம் டன்னிலிருந்து, 2 லட்சத்து 41 ஆயிரம் டன் என்றளவில் சற்றே உயர்ந்துள்ளது.
இஞ்சி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 68 சதவீதம் அதிகரித்து, 121 கோடியிலிருந்து, 204 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், 37 சதவீதம் உயர்ந்து, 15 ஆயிரத்து 750 டன்னிலிருந்து, 21 ஆயிரத்து 550 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மஞ்சள்:மஞ்சள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 4 சதவீதம் உயர்ந்து, 702 கோடியிலிருந்து, 734 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 61 சதவீதம் வளர்ச்சிகண்டு, 49 ஆயிரத்து 250 டன்னிலிருந்து, 79 ஆயிரத்து
500 டன்னாகவும் உயர்ந்துள்ளது.சீரகம் ஏற்றுமதி, மதிப்பீட்டின் அடிப்படையில், 63 சதவீதம் வளர்ச்சிகண்டு, 396 கோடியிலிருந்து, 644 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 40 சதவீதம் வளர்ச்சியடைந்து, 32 ஆயிரத்து 500 டன்னிலிருந்து, 35 ஆயிரம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.அதேசமயம், தனியா ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2 சதவீதம் குறைந்து, 167 கோடியிலிருந்து, 164 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 31 சதவீதம் குறைந்து, 40 ஆயிரத்து 500 டன்னிலிருந்து, 28 ஆயிரத்து 100 டன்னாக குறைந்துள்ளது.
பூண்டு :பூண்டு ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 80 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 69 கோடியிலிருந்து, 14 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், 87 சதவீதம் சரிவடைந்து, 17 ஆயிரத்து 300 டன்னிலிருந்து, 2,200 டன்னாகவும் குறைந்துள்ளது.புதினா பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 31 சதவீதம் உயர்ந்து, 1,697 கோடியிலிருந்து, 2,224 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 15 சதவீதம் குறைந்து, 17 ஆயிரத்து 450 டன்னிலிருந்து, 14 ஆயிரத்து 750 டன்னாக குறைந்துள்ளது.
நறுமண எண்ணெய் மற்றும் "ஓலியோரெசீன்ஸ்' ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 4 சதவீதம் குறைந்து, 7,600 டன்னிலிருந்து, 7,265 டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 43 சதவீதம் உயர்ந்து, 910 கோடியிலிருந்து, 1,304 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)