செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு ... விரிவாக்கத்திற்காக ரூ.6,000 கோடி முதலீடு: பவர் கிரிட் விரிவாக்கத்திற்காக ரூ.6,000 கோடி முதலீடு: பவர் கிரிட் ...
நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை... தமிழகம் 1,637 முதலீட்டு திட்டங்களை ஈர்த்து சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2012
23:56


- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சென்ற ஜூன் மாதம் வரை, தமிழகம் 9.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,637 திட்டங்களை ஈர்த்துள்ளது. இவற்றில், மின்சாரம் மற்றும் சேவைகள் துறைகளில், பெரும்பாலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அசோசெம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."உயரிய வளர்ச்சியில் தமிழகம்-' என்ற தலைப்பிலான அவ்வறிக்கையின் விவரம்:சென்ற ஜூன் மாதம் வரை, இந்திய மாநிலங்கள் 139.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளன. இவற்றில், தமிழகத்தின் பங்களிப்பு 6.5 சதவீதமாக (9.20 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இது, ஆண்டுக்கணக்கில் 15 சதவீத வளர்ச்சியாகும். இத்திட்டங்களை செயல்படுத்தும் பணியில், தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.பங்களிப்புநாட்டில் மேற்கொள்ளப்படும் அரசு துறைகளின் மொத்த முதலீட்டில்,தமிழக அரசு துறைகளின் பங்களிப்பு 8.5 சதவீதமாகவும், தனியார் துறையின் மொத்த முதலீட்டில், அதன் பங்களிப்பு 5.2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டில், 38.5 சதவீதம், அதாவது 3.50 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மின் துறை ஈர்த்துள்ளது. சேவை, தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பங்களிப்பு, முறையே, 32.3,17.5 மற்றும் 9.6 சதவீதமாக உள்ளது.மாநிலம் ஈர்த்துள்ள மொத்த முதலீடுகளில், 48 சதவீத திட்டங்களை செயல்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 42 சதவீத திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமான நிலையில் உள்ளன. 9 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் நிறுத்தப்பட்டு அல்லது முன்னேற்றம் ஏதும் காணாத நிலையில் உள்ளன.உள்நாட்டு உற்பத்தி2004-05 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 219 லட்சம் கோடியில் இருந்து 428 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது.மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறையின்பங்களிப்பு, 65.8 சதவீதமாகவும், ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி, 12 சதவீதமாகவும் உள்ளது. இது, தொழில் துறையில், முறையே, 26.5 சதவீதம் மற்றும் 7 சதவீதமாகவும், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், முறையே, 7.6 சதவீதம் மற்றும் 4 சதவீதமாகவும் உள்ளது.மதிப்பீட்டு ஆண்டுகளில், தயாரிப்பு துறையின் உற்பத்தி மற்றும் கட்டுமான நடவடிக்கைகளின் வளர்ச்சி 17 சதவீதமாகவும், இவற்றின் ஆண்டு வளர்ச்சி 9 சதவீதம் என்ற அளவிலும் காணப்படுகிறது.சேவை துறைமாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான சேவைகள் துறையின் வளர்ச்சியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மதிப்பீட்டு ஆண்டுகளில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறையின் பங்களிப்பு 64.7 சதவீதமாக உள்ளது. அடுத்த இடங்களில், மகாராஷ்டிரா (61.9 சதவீதம்), ஆந்திரா (53.4 சதவீதம்),குஜராத் (46 சதவீதம்) ஆகியவை உள்ளன.மாநிலத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க, குறைந்த செலவிலான மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மின்தடையால், வேளாண் மற்றும் தொழில் துறைகளின் உற்பத்தி பங்களிப்பு குறைவதை எதிர்கொள்ள, உரிய கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.துறைமுகங்கள்கடல் வாழ் பொருட்கள் மேம்பாட்டு அமைப்பு, தனியாருடன் இணைந்து, தனி நிறுவனங்களை ஏற்படுத்தி, துறைமுகங்கள் மற்றும் அது சார்ந்த பகுதிகளில் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்களை உருவாக்க வேண்டும். மேலும், கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்கு சரக்குகளை சுலபமாக கொண்டு செல்லும் வகையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் வாகனம், ரசாயனம் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் துறை சிறப்பாக மேம்பாடு கண்டுள்ளது. ஆனால், தண்ணீர் சார்ந்த ரசாயன தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளிப்பதை தவிர்க்க வேண்டும்.நீண்ட கால முதலீட்டு திட்டங்களுக்கு வங்கிகள் போதிய ஆதரவு வழங்குவதில்லை. அதனால், தமிழக அரசின் தொழில் முதலீட்டு மேம்பாட்டு கழகங்கள், சீரமைக்கப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இந்தியாவில், தமிழகம், கவர்ச்சிகரமான முதலீட்டு மையம் என்பதற்கேற்ப, முதலீட்டு திட்டங்கள் அதிக அளவில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவேண்டும்' என, "அசோசெம்' தலைவர் ராஜ்குமார் தூத் தெரிவித்துள்ளார்.


தமிழகம் வழிகாட்டுகிறது
தமிழகம், துறைவாரியாக மேற்கொண்ட, பன்முக செயல்பாட்டு வளர்ச்சி திட்டங்களால், பல மோசமான தருணங்களையும் சிறப்பாக எதிர்கொண்டு சமாளித்துள்ளது. இடர்பாடுகளை குறைக்க, இத்தகைய வழிமுறை மிகச் சிறந்த உதாரணமாகும். தொழில் மற்றும் சேவைகள் துறைகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில், திட்டமிட்ட நிலைப்பாடு அவசியம். அந்த வகையில், குறிப்பாக, கடந்த 2-3 ஆண்டுகளாக, தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுபிர் கோகர்ன், ரிசர்வ் வங்கி துணை கவர்னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)