பதிவு செய்த நாள்
06 ஜூலை2012
10:26

ஐதராபாத்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், மின் விநியோகம் மற்றும் பகிர்மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திரா, ஒரிசா மாநிலத்தின் சில பகுதிகள், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட அதன் தென் பிராந்தியத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக ரூ.6,000 கோடி முதலீட்டில் ஏழு விரிவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வர உள்ள இந்த திட்டங்களில் சில பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. 400 முதல் 765 கிலோவாட் திறன் கொண்ட இந்த உப மின் திட்டங்கள் நெல்லூர், ரெய்ச்சூர், கர்நூல், ஹைதராபாத், கம்மம், வேமகிரி மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் அமைய உள்ளன. இவற்றில் 4 நிலையங்கள் இயற்கை எரிவாயுவை இடு பொருளாக பயன்படுத்தும் அதி நவீன தொழில் நுட்பத்தில் இயங்குபவை என இந்நிறுவனத்தின் செயல் இயக்குநரான வி. சேகர் அறிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|