பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
14:51

கார்பன் மொபைல் நிறுவனம் வர்த்தக விரிவாக்கத்திற்காக ரூ.445 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. அதிகபட்சம் எலக்ட்ரானிக் சாதனங்களின் தயாரிப்பில் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் சிறப்பாக செயலாற்றி கொண்டு வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு இணையாக தற்போது உள்நாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.ஆனால் இன்று இந்திய நிறுவனங்களும் தொழில் நுட்ப சாதனங்களை சிறப்பாக தயாரித்து வழங்கி வருகிறது. இதில் இந்திய நிறுவனமான கார்பன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த வருவாயினை பெற 445 கோடி முதலீடு செய்வதாக உள்ளது. இது போன்று தொழில் நுட்ப வகையில் சில மேம்பாட்டினை செய்வதற்காக 445 கோடி முதலீடு செய்வதன் மூலம், 2013, 2014ம் ஆண்டுக்களுக்கான இடைபட்ட காலத்தில் 3,500 கோடி வருவாயினை பெறலாம் என்று தெரிய வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த நிதி ஆண்டில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 195 கோடி முதலீடு செய்துள்ளது இதனால் அடுத்த ஆண்டில் 250 கோடி கூடுதல் வருவாயினை பெற முடியும் என்ற கூறியிருக்கிறார் கார்பன் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|