பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
00:55
நாமக்கல்:நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையை 15 காசுகள் குறைத்து, 270 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.இது குறிந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:வட இந்தியாவில் ஸ்ராவன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, அங்கு முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதனால், ஐதராபாத், பர்வாலா மற்றும் ஹோஸ்பெட் உள்ளிட்ட மண்டலங்களில் முட்டை விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்:சென்னை 295 காசு, பெங்களூரு 280, மைசூரு 280, ஐதராபாத் 265, மும்பை 295, விஜயவாடா 265, கோல்கட்டா 300, பர்வாலா 248, டில்லி 267 காசு, என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 38 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை, 60 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|