வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடம் ... பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு ...
ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.74 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:35

புதுடில்லி: சென்ற ஜூன் மாதத்தில், ஜி.எஸ்.எம்.தொழில்நுட்பத்திலான, அலைபேசி சேவையை, பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 46.40 லட்சம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில், புதிதாக இணைந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட, 0.69 சதவீதம் அதிகமாகும். இதையடுத்து, ஜூன் மாதம் வரை, இச்சேவையை பெற்றுள்ளவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை, 67.74 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், மகாராஷ்டிராவில், இப்பிரிவின் கீழ், புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை, 6,21,124 ஆக உயர்ந்துள்ளது. இது, 134 சதவீத வளர்ச்சியாகும்.ஏர்டெல்சென்ற ஜூன் மாதத்தில், ஏர்டெல் நிறுவனம், புதிதாக 20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18.73 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வழங்குவதில், 27.65 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.கடந்த ஜூன் 30ம் தேதி வரை, 22.69 சதவீத பங்களிப்புடன் வோடபோன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் சென்ற ஜூன் மாதத்தில், 12.20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15.37 கோடியாக உள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், 17.30 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், சென்ற ஜூன் மாதத்தில் புதிதாக, 11.90 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11.72 கோடியாக உள்ளது.ஏர்செல்சென்ற ஜூன் நிலவரப்படி, பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9.46 கோடியாக உள்ளது. இதே மாதத்தில், ஏர்செல் நிறுவனம் 4.80 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்ந்துள்ளது. வீடியோகான் மற்றும் எம்.டி.என்.எல்., வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, முறையே 55.80 லட்சம் மற்றும் 53.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
யுனிநாரின் தமிழக öŒயல்பாடு முடிவுக்கு வருகிறதுஸ்பெக்ட்ரம் ஏல விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால், யுனிநார் நிறுவனம், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய நான்கு தொலைத் தொடர்பு வட்டங்களில் அதன் செயல்பாட்டை குறைத்துக் கொள்ள உள்ளது. அதேசமயம், இதர ஒன்பது வட்டங்களில், அதன் சேவையை வலுப்படுத்திக் கொள்ள உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய நான்கு தொலைத் தொடர்பு வட்டங்களில், இந்நிறுவனத்திற்கு 68 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவ்வட்டங்களில் உள்ள நிறுவனத்தின் கிளைகளில் 400 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.மே மாத நிலவரப்படி, யுனிநார் நிறுவனத்திற்கு, 4.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்ற ஜூன் மாதம் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை4.55 கோடியாக உயர்ந்துள்ளது.அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி, இந்நிறுவனம் செயல்படும் 22 வட்டங்களின் தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமம், வரும் செப்டம்பர் 7ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், நாடு தழுவிய அளவில் 122 உரிமங்களை ரத்து செய்தது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள், மீண்டும் புதிதாக ஏலம் நடத்தி, உரிமம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனம், யுனிநார் நிறுவனத்தில், 67 சதவீத பங்குமூலதனத்தை கொண்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)