பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:42

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 1.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், திரட்டப்பட்ட தொகையை விட (1.32 லட்சம் கோடி ரூபாய்) 4.68 சதவீதம் அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேரடி வரிகள் பிரிவின் கீழ், நிறுவனங்கள் செலுத்தும் வரி, தனிநபர் வருமான வரி, செல்வ வரி, பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை இடம்பெறுகின்றன.சென்ற மே மாதத்தில், தயாரிப்பு துறையில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக, தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண், 2.4 சதவீதம் என்றளவில் குறைந்த வளர்ச்சி கண்டிருந்தது.மதிப்பீட்டு காலத்தில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, குறைந்தளவு தொகையே திரும்பவழங்கப்பட்டுள்ளது. இதனால், நிகர நேரடிவரி வசூல், 34 சதவீதம் உயர்ந்து, 78,679 கோடியிலிருந்து, 1.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மொத்த தனிநபர் வருமான வரி வசூல், 16 சதவீதம் வளர்ச்சிகண்டு, 47,195 கோடியிலிருந்து, 54,642 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.செல்வ வரி வசூல், 41.60 சதவீதம் வளர்ச்சியடைந்து, 177 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|