பதிவு செய்த நாள்
07 ஆக2012
23:43

சென்னை: சென்னை ஆயத்த ஆடைகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், "டிரன்ட் எடிஷன் 2012' என்ற பெயரில், ஆயத்த ஆடை கண்காட்சி இன்று துவங்குகிறது.இதுகுறித்து இக்கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:தமிழகத்தின் ஆயத்த ஆடை சந்தை மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில்,சென்னையின் பங்களிப்பு, 30 சதவீதம் என்றளவில் உள்ளது. உள்நாட்டு தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும், கண்காட்சி நடத்தப்படுகிறது.பண்டிகை காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு, சில்லரை வர்த்தகர்கள், ஒரே இடத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். சென்னை வர்த்தக மையத்தில், வர்த்தகர்கள்மட்டுமே பங்கு பெறும், இக்கண்காட்சி இன்று துவங்கி (8ம் தேதி), 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இதில், நாடு தழுவிய அளவில், 180க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களும், 5,000க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாளர்களும் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு கண்காட்சியில், 105 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடைகள் விற்பனையாயின. இது, நடப்பாண்டில், 150 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|