பதிவு செய்த நாள்
09 ஆக2012
15:35

உலகளவில், சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., நிறுவனம். இந்த நிறுவனம் தனது 3 சிரீஸ் மாடல் காரை, 1975ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது ஆறாவது தலைமுறையை சேர்ந்த 3 சிரீஸ் கார் வந்து விட்டது. இந்தியாவில், பி.எம்.டபிள்யூ., நிறுவனம் காலடி எடுத்து வைத்து ஐந்து ஆண்டுகளாகி விட்டது. இருந்தாலும், தற்போது தான் 3 சிரீஸ் காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பையில், எஃப் 30 3 சிரீஸ் காரை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தினார். பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். டீஸல் காரில், 2 லிட்டர், 4 சிலிண்டர் காமன் ரயில் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக, மணிக்கு 235 கி.மீ., வேகம் செல்ல கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ., வேகத்தை, 7.6 வினாடிகளில் தொட்டு விடும். பெட்ரோல் காரில், 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ., வேகத்தை, 6.1 வினாடிகளில் தொட்டு விடும். அதிகபட்சமாக, மணிக்கு 235 கி.மீ., வேகத்தில் செல்ல கூடியது. பெட்ரோல் மற்றும் டீஸல் கார்களில், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. டீஸல் கார், ஒரு லிட்டருக்கு, 18.88 கி.மீ., மைலேஜும், பெட்ரோல் கார், 14.79 கி.மீ., மைலேஜும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ., 3 சிரீஸ் கார், ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.28.90 லட்சத்தில் துவங்கி, ரூ.37.90 லட்சம்( எக்ஸ் ஷோரூம், டில்லி) வரை உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|