தொழில் துறை உற்பத்தியில் சரிவு ஏமாற்றம் அளிக்கிறது: மான்டேக் சிங்தொழில் துறை உற்பத்தியில் சரிவு ஏமாற்றம் அளிக்கிறது: மான்டேக் சிங் ... புதிய ஐந்து ரூபாய் நாணயம்:விரைவில் வெளியீடு புதிய ஐந்து ரூபாய் நாணயம்:விரைவில் வெளியீடு ...
நடப்பு 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில்... தொழில் துறை உற்பத்தி 1.8 சதவீதம் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2012
03:39

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, மைனஸ் 1.8 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், இது, 9.5 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது என, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. வட்டி விகிதம்:பொருளாதார சுணக்க நிலை மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது போன்றவற்றால், கடந்த ஒரு சில மாதங்களாக, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிக ளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணவீக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. இருப்பினும், எஸ்.எல்.ஆர். எனப்படும், வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான, சட்டப்பூர்வ முதலீட்டு விகிதம், 24 சதவீதத்திலிருந்து, 23 சதவீ தமாக குறைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டிலும், நாட்டின் தொழில் துறை உற்பத்தி மைனஸ், 0.1 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இது, 6.9 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது.நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள தயாரிப்புத் துறை, சென்ற ஜூன் மாதத்தில், மைனஸ் 3.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், இத்துறை, 11.1 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தயாரிப்புத் துறை உற்பத்தி, மைனஸ் 0.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறை, 7.7 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. பொறியியல்:பொறியியல் துறையின் உற்பத்தி, சென்ற ஜூன் மாதத்தில், 27.9 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 38.7 சதவீதம் என்றளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இத்துறையின் உற்பத்தி, 19.6 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 17 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், சென்ற மே மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, முதலில், 2.4 சதவீதம் என்ற ளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 2.53 சதவீதமாக மாற்றி அமைக்கப் பட்டுள் ளது.சுரங்க துறைநடப்பாண்டு ஜூன் மாதத்தில், சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.6 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இத்துறை, மைனஸ் 1.4 சதவீதம் என்றளவில் பின்னடவை கண்டிருந்தது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 1.1 சதவீதம் என்றளவில் சரி வடைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலாண்டில், இத்துறை, 0.6 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது.இருப்பினும், நுகர்பொருள் துறையின் உற்பத்தி, சென்ற ஜூன் மாதத்தில், 3.5 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 3.1 சதவீதம் என்றளவில் இருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இத்துறையின் வளர்ச்சி, 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4.4 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது. நுகர்வோர் சாதனங்கள்:சென்ற ஜூன் மாதத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி மிகவும் சிறப்பாக இருந்ததை அடுத்து, இதன் வளர்ச்சி, 9.1 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்திருந்தது.இது, கடந்த நிதி யாண்டின் இதே மாதத்தில், 1.6 சதவீதம் என்றளவில் மிகவும் குறைந்திருந்தது. ஜூன் மாதத்துடன் நிறை வடைந்த காலாண்டில், இத்துறையின் வளர்ச்சி, 8 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 2.7 சதவீதம் என்றளவில் இருந்தது. நுகர்வோர் சாதனங்கள் அல்லாத துறையின் உற்பத்தி, சென்ற ஜூன் மாதத்தில், மைனஸ் 0.1 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 4.3 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.7 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 5.9 சதவீதம் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது. மின்சாரம்:சென்ற ஜூன் மாதத்தில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.8 சதவீதம் என்றளவில் உயர்ந்துள் ளது. இது, கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், 8 சதவீதம் என்றளவில் இருந்தது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.4 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 8.3 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)