பதிவு செய்த நாள்
19 ஆக2012
00:00

கோவை:கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், "சுசி' ஈமு நிறுவனம் குறித்து 159 புகார்களும், "குயின்' நிறுவனம் குறித்து, 66 புகார்களும், பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையிலுள்ள, "சுசி' ஈமு நிறுவனத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர். "குயின்' ஈமு நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 160 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்துள் ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக, முதலீட்டாளர்களுக்கு ஈமு நிறுவனங்கள் பணம் வழங்கவில்லை. இதனால், ஈமு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், புகார் கொடுத்து வருகின்றனர்.
ஈமு நிறுவனங்களின் ஒப்பந்தம், பணம் செலுத்தியரசீது, பண பரிவர்த்தனை ஆவணங்கள், ஈமு வளர்ப்பதற்கான வீடியோ ஆவணங்களுடன் புகார் மனு கொடுக்கின்றனர்.நேற்று ஒரு நாளில் "சுசி' நிறுவனம் குறித்து 20 புகாரும், "குயின்' நிறுவனம் குறித்து 30 புகார்களும் வந்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|