பதிவு செய்த நாள்
28 ஆக2012
14:24
ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஏற்கனவே, டொயோட்டா காம்ரே கார், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த கார், முழுமையாக ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு முதல், இந்தியாவில் காம்ரே கார் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், சமீபத்தில் புதிய காம்ரே கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், இந்தியாவில் அசெம்பள் செய்யப்படுகிறது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்துக்கு, பெங்களூருவை அடுத்த பிடதியில் தொழிற்சாலை உள்ளது. அங்கு தான், காம்ரே கார் உருவாக்கப்படுகிறது. இதற்கு தேவையான உதிரிபாகங்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதிய காம்ரே கார், ஹோண்டா அக்கார்டு மற்றும் ஹுண்டாய் சொனட்டா ப்ளூயிடிக் கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய காம்ரே காரில், 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்மிஷன் வசதி கொண்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ.23.8 லட்சம்( எக்ஸ்ஷோரூம், டில்லி). பழைய காம்ரே காரை விட, புதிய காரின் விலை ரூ.2 லட்சம் அதிகம். பழைய காரை விட, புதிய காரில் பின் இருக்கையில் அமருபவர்களுக்கு, தாராள இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல பாதுகாப்பு அம்சங்கள், புதிய காரில் இடம் பெற்றுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|