பதிவு செய்த நாள்
28 ஆக2012
16:39
ஜெர்மனி நாட்டை சேர்ந்த வோக்ஸ்வாகன் நிறுவனம், இந்தியாவில், போலோ, வென்டோ, பஸாத், தவுரக், பீட்டல் ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் போலோ மற்றும் வென்டோ கார்கள், கடந்த 2010ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. மஹாராஷ்டிராவின் சாகன் என்ற இடத்தில், வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 5,371 கார்களாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 5,397 கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இந்த சூழ்நிலையில், போலோ மற்றும் வென்டோ கார்களை உயர்த்த, வோக்ஸ்வாகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்த மறுத்து விட்டார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|