பதிவு செய்த நாள்
02 செப்2012
00:28

புதுடில்லி:பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில், சென்ற ஆகஸ்ட் மாதம், மாருதி சுசூகி நிறுவனம் நீங்கலாக, பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.ஹுண்டாய்: உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை 28,257 ஆக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட (26,677), 5.9 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 23.4 சதவீதம் சரிவடைந்து, 24,335 என்ற எண்ணிக்கையிலிருந்து, 18,629 ஆக குறைந்துள்ளது.இதனால், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன விற்பனை 8 சதவீதம் சரிவடைந்து, 51,012 என்ற எண்ணிக்கையிலிருந்து, 46,886 ஆக குறைந்துள்ளது.
மாருதி சுசூகி: மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 40.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 91,442 என்ற எண்ணிக்கையிலிருந்து, 54,154 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. தொழிலாளர் பிரச்னை காரணமாக, இந்நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை ஒரு மாதம் மூடப்பட்டது. இதனால், இதன் வாகன விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 35 சதவீதம் சரிவடைந்து, 77,086 லிருந்து, 50,129 ஆக குறைந்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், 72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 14,356 லிருந்து, 4,025 ஆக சரிவடைந்துள்ளது.போர்டு இந்தியா:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், போர்டு இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த கார் விற்பனை, 16.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,916 லிருந்து, 10,352 ஆக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,382 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7,840 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின், கார் ஏற்றுமதி, 63 சதவீதம் அதிகரித்து, 1,534 லிருந்து, 2,512 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர்:டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற ஆகஸ்டில் 19.83 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,995 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை,சென்ற ஆண்டு இதே மாதத்தில் 11,679 ஆக இருந்தது.
இதே மாதங்களில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை, 21.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37,684ல் இருந்து 45,836 ஆக அதிகரித்துள்ளது. இதன் உள்நாட்டு வாகன விற்பனை, 19.77 சதவீதம் உயர்ந்து, 35,756ல் இருந்து 42,826 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற ஆகஸ்டில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை,17 சதவீதம் சரிவடைந்து 9,050ல் இருந்து 7,510 ஆக குறைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|