தங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்ததுதங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.15.96 லட்சம் கோடி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.15.96 லட்சம் கோடி ...
நடப்பு 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில்...முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 1.8 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2012
00:30

புதுடில்லி:நாட்டின் முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே மாதத்தில், 8.2 சதவீதம் என்ற அளவிலும், சென்ற ஜூன் மாதத்தில், 3.9 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்து காணப்பட்டது என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், 6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.முக்கிய எட்டு தொழில் துறைகளின் கீழ், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சென்ற ஜூலை மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற ஜூன் மாதத்தில், 7.2 சதவீதம் என்ற அளவிலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 2.5 சதவீதம் என்ற அளவிலும் சற்று உயர்ந்திருந்தது.
நடப்பு நிதியாண்டின், ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இதன் வளர்ச்சி, 0.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது.
கச்சா எண்ணெய்:கச்சா எண்ணெய் உற்பத்தி, சென்ற ஜூலை மாதத்தில், மைனஸ் 0.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுஉள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.4 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 0.6 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறை, 7.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
சென்ற ஜூலை மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 13.5 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்திலும், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் :8.2 சதவீதமாகவே இருந்தது. நடப்பு நிதியாண்டின் நான்கு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி மைனஸ் 11.7 சதவீதமாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மைனஸ் 9.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
பெட்ரோலிய பொருட்கள்:சென்ற ஜூலை மாதத்தில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 3.7 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின், ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.3 சதவீதமாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 4.8 சதவீதமாக இருந்தது.கடந்த ஜூலை மாதத்தில், உரத்துறையின் உற்பத்தி, மைனஸ் 2.2 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 1.6 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின், நான்கு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 9.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில்,
0.4 சதவீதம் என்ற அளவில் குறைந்தஅளவிலேயே வளர்ச்சி கண்டிருந்தது.
சென்ற ஜூலை மாதத்தில், உருக்கு துறையின் உற்பத்தி, 4.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி, 16.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்திருந்தது.
நடப்பு நிதியாண்டின் நான்கு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.8 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 10.4 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்து காணப்பட்டது.சிமென்ட்:சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 3.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 13 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 2.2 சதவீதமாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 13 சதவீதமாக மிகவும் உயர்ந்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், மின்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 9.4 சதவீதம் என்றஅளவில் உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)