நூலிழை இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை நூலிழை இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ...
நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில்...ஏற்றுமதி ரூ.1.23 லட்சம் கோடி ரூபாயாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2012
23:44

புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 14.8 சதவீதம் சரிவைக் கண்டு, 2,240 கோடி டாலராக (1.23 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு நிலையாகும்.பொருளாதார சுணக்க நிலைஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைந்து போயுள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி மிகவும் குறைந்துள்ளது.இதே போன்று, நாட்டின் இறக்குமதியும் 7.61 சதவீதம் குறைந்து, 3,790 கோடி டாலராக (2.08 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இதனால், வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது.ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகமாக இருப்பதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1,550 கோடி டாலராக (85,250 கோடி ரூபாய்) உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்ரல்-ஜூலை), நாட்டின் ஏற்றுமதி, 5.06 சதவீதம் குறைந்து, 9,760 கோடி டாலராக (5.34 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இதே காலத்தில், இறக்குமதியும் 6.47 சதவீதம் குறைந்து, 15,320 கோடி டாலராக (8.43 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது குறித்து மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி, உலக நாடுகளின் வர்த்தகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க சந்தைகளிலும், பொருட்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கவில்லை. எனவே, வரும் நாட்களும் சவாலானதாகவே இருக்கும் அமையும்' என்று தெரிவித்தார்.நாட்டின் ஏற்றுமதி குறித்து, வர்த்தக நிபுணர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "தற்போதைய சூழலில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, இலக்கு அளவான 36,000 கோடி டாலரை (19.80 லட்சம் கோடி ரூபாய்) எட்டுவது என்பது மிகவும் கடினம்' என்று தெரிவித்தார்.சர்வதேச சந்தை நிலவரங்கள் தொடர்ந்து சுணக்கமாகவே உள்ளன. பல்வேறு புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருப்பினும், அதிகளவு பங்களிப்பை கொண்ட நாடுகளின் சந்தைகள் இன்னும் மந்த நிலையிலேயே உள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டிற்கான ஏற்றுமதி இலக்கை எட்டுவது என்பது சந்தேகம் தான் என, இந்திய வெளிநாட்டு வர்த்தக பயிலகத்தின் (ஐ.ஐ.எப்.டி) இயக்குனர் கே.டி. சாக்கோ தெரிவித்தார்.கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்தியாவின் ஏற்றுமதி 23.5 சதவீத அளவிற்கு மிகவும் வீழ்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஜூலையில், எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத பொருட்களின் இறக்குமதி முறையே 5.52 சதவீதம் குறைந்து, 1,222 கோடி டாலர் என்றஅளவிலும் (67,210 கோடி ரூபாய்) மற்றும் 8.57 சதவீதம் சரிவடைந்து, 2,570 கோடி டாலர் (1.41 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிலும் உள்ளது.கச்சா எண்ணெய் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 2.76 சதவீதம் குறைந்து, 5,381 கோடி டாலராக (2.96 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில், 5,236 கோடி டாலர் (2.88 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.மேலும், இதே காலத்தில், எண்ணெய் சாராத பொருட்களின் இறக்குமதி 10.82 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,938 கோடி டாலர் (5.47 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)