பதிவு செய்த நாள்
09 செப்2012
00:34

சென்னை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், டாட்டா, "செனான் பிக் அப்' என்ற வர்த்தக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் (வர்த்தக வாகனங்கள்) ரவி பிஷாரோடி கூறியதாவது:நாட்டில், வர்த்தக வாகனத் துறை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது.
"செனான்' வாகனத்தை, அறிமுகம் செய்ததன் மூலம், வர்த்தக வாகனச் சந்தையில், நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்கும். இந்த வாகனத்தில், அதிக திறன் கொண்ட இன்ஜின், கியர் பாக்ஸ், ரேடியல் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எரிபொருள் சிக்கனம் கொண்ட,"செனான் பிக் அப்' வாகனத்திற்கு, மூன்று லட்சம் கி.மீ., அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.குறைந்தபட்சம், 5.44 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம், 6.34 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட இந்த வாகனம், நீலம், சிவப்பு, சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|