பதிவு செய்த நாள்
09 செப்2012
00:35

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 28 கோடி டாலர் (1,540 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,046 கோடி டாலராக (15,97,530 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
இது, முந்தைய 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,018 கோடி டாலர் (15,95,990 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரங்களில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 52.47 கோடி டாலர் உயர்ந்துஉள்ளது. அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25.20 கோடி டாலர் குறைந்து, 25,762 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 89 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|