பதிவு செய்த நாள்
10 செப்2012
13:02

குன்னூர் : குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தின் 36வது ஏலத்தில் 12.76 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில் இலை ரகம் 9.38 லட்சம் கிலோவும், டஸ்ட் ரகம் 3.38 லட்சம் கிலோவும் அடங்கும்.இந்த வாரம் 91 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் விலை ஏற்றம் கிடைத்தது. சாதாரண இலை ரகம் கிலோ ஒன்று 72 ரூபாய் முதல் 75 ரூபாய் வரையிலும், உயர் வகை 100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரையிலும், டஸ்ட் ரகம் சாதாரண வகை 81 ரூபாய் முதல் 84 ரூபாய் வரையிலும், உயர் வகை 100 ரூபாய் முதல் 138 வரையிலும் விற்பனையானது.
"சிடிசி' ரகம் அதிகபட்சமாக ஹோம்டேல் எஸ்டேட்டின் தேயிலை தூள் 167 ரூபாய்க்கும், ஆர்தோடக்ஸ் ரகத்தில் எஸ்டேட்டின் தூள் கிலோ ஒன்று 180 ரூபாய்க்கு விற்பனையானது.
வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கும் 37வது ஏலத்தில் 11.78 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதில் இலை ரகம் 8.48 லட்சம் கிலோவும், டஸ்ட் ரகம் 3.30 லட்சம் கிலோவும் அடங்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|