பதிவு செய்த நாள்
05 அக்2012
01:15

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. மத்திய அரசு, மேலும் பல பொருளாதார சீர்திருந்த அறிவிப்புகளை வெளியிடும் என்ற நிலைப்பாட்டால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடுகளை விஞ்சி, அமெரிக்காவில், வேலை வாய்ப்பு மற்றும் சேவை துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன என்ற அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, பொறி யியல் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கை மாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், மருந்து, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது,188.46 புள்ளிகள் அதி கரித்து, 19,058.15 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 19,107.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,939.75 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென் செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், எஸ்.பீ.ஐ., மாருதி உள்ளிட்ட 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா உள்ளிட்ட 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 56.35 புள்ளிகள் உயர்ந்து, 5,787.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 5,807.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,751.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|