பதிவு செய்த நாள்
05 அக்2012
01:16

புதுடில்லி:இந்திய தரைவிரிப்புகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது. இதை யடுத்து, öŒன்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி 9.34 கோடி டாலராக ( 514 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (8.99 கோடி டாலர்/494 கோடி ரூபாய்)விட, 4 சதவீதம் அதிகம் என, தரைவிரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு (சி.இ. பி.சி.,) தெரிவித்துள்ளது.புதிய சந்தைகளான, சீனா, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடு களில், இந்திய தரைவிரிப்புகளுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதுவே, இதன் ஏற்றுமதி உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
இருப்பினும், நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதியில், 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள அமெ ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், இந்திய தரைவிரிப்புகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அள விற்கு அதிகரிக்கவில்லை.மதிப்பீட்டு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தரைவிரிப்புகள் ஏற்று மதியில், செயற்கை இழைகளால் ஆன தரை விரிப்புகள் ஏற்றுமதி 43 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, கைகளால் நெய்யப்பட்ட கம்பளி தரைவிரிப்புகள் ஏற்றுமதி 29 சதவீதம் உயர்ந் துள்ளது. கைகளால் தயாரிக்கப்பட்ட பட்டு தரைவிரிப்புகள் ஏற்றுமதி 20 சதவீதமும், பிரத்யேக தொழில்நுட்பத்தில் கையால் தயாரிக்கப்பட்ட கம்பளி தரை விரிப்புகளின் ஏற்றுமதி 16.49 சதவீதமும் அதிகரித்துள்ளன.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி, 2.17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 54 கோடி டாலராக (2,970 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், தரை விரிப்புகள் ஏற்றுமதி 100 கோடி டாலரை எட்டும் என சி.இ.பி.சி., மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|