தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.7,480 கோடி இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.7,480 கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வலிமையாய் புதுமையாய் பயணிக்க சுகமாய் ஃபீனிக்ஸ் 125
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
16:50

.டிவிஎஸ் நிறுவனம் மோட்டார்பைக் செக்டரில் தங்கள் பெயரை நிலைநிறுத்தியே தீர்வது என்ற லட்சியத்தோடு சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கே அமைத்து உருவாக்கியுள்ள பைக்கே டிவிஎஸ் ஃபீனிக்ஸ்125 அதிக செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் கூடவே பிக்அப்பையும் சேர்த்து அளிக்கும் இகோத்ரஸ்ட் என்ஜினும், கார்களில் இருப்பது போன்ற டிஜிட்டல் கருவிகள் கொண்ட பானலும், அலாய்வீல் பெட்டல் டிஸ்க், இரட்டை வண்ணக் கலவைகள் கொண்ட நிறமும் போன்ற நவீன தோற்றமும் கொண்டு ஃபீனிக்ஸ், பைக் ஓட்டு பவருக்கு சொகுசான அற்புதமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
டிவிஎஸ் ஃபீனிக்ஸ்125 மோட்டார் பைக்கின் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் இகோ த்ரஸ்ட் என்ஜின் 11PS பவரும் 10NM டாக்கும் 8000 ஆர்பிஎம்மில் கொடுக்கும்
திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஸ்பீட் பவர் டிரெயினை இதன் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி இயக்கி வைக்கிறது. இதன் இகோத்ரஸ்ட் என்ஜின் தொழில்நுட்பமான டைனமிக் ட்யூனிஸ் மூலம் பெட்ரோலின் போக்கை சீர்மைபடுத்தி அதன் மூலம் என்ஜின் திறனும் பிக்அப்பும் குறையாமல் அதே நேரம் எரிபொருள் சிக்கனம் கொடுக்கும் வகையில் செய்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 67 கிலோமீட்டர் கொடுப்பதாக கூறப்படுகிறது.
எக்சிகியூடிவ் பைக் வரிசையில் உள்ள ஃபீனிக்ஸ் சில புதுமையான அம்சங்களை கொண்டுள்ளது ப்ரீமியர் ஆம்பர் விளக்கு வசதியுடன் உள்ள முழுமையான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், எரிபொருள் அளவுமானி, பேட்டரி இன்டிகேட்டர், டிரிய் மீட்டர், வண்டி சர்வீசை நினைவுபடுத்தும் மீட்டர், LED பைலட் விளக்குகள், எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்டும் மானி, சாப்ட் டச் சுவிட்ச் கியர் போன்றவை.
ஃபீனிக்ஸ் உள்ள சிறப்பு அம்சங்களாகும். டாங்கில் ஒட்டப் பட்டிருக்கும் 125CC டீகால் இதற்கு கம்பீரமான ஒரு அழகை கொடுக்கிறது. இதன் 5 படிநிலைகள் கொண்ட அட்ஜஸ்டபிள் சீரிஸ் ஸ்பரிஸ் சஸ்பென்ஷன் மற்றும் உயர்திறன் கொண்ட டேம்பர் வாகன பிரயாணத்தை சுகமாக்குகிறது. இதன் உயர் அழுத்தத்துடன் கூடிய பிரீமியம் குஷன் இருக்கை களைப்பற்ற பிரயாணத்தை கொடுக்கிறது. இதன் சரியான கோணத்தில் பொருத்தப் பட்டுள்ள ஹாண்டில்பார் சரியான கட்டுப்பாட்டை கொடுக்கிறது.
ட்ரம் ப்ரேக் மாடலுக்கு 51000 ரூபாயும் டிஸ்க் ப்ரேக் மாடலுக்கு 53000 ரூபாயும் சென்னையின் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அழகு, கம்பீரம், அதிக செயல்திறன், எரிபொருள் சிக்கனம், விற்பனைக்கு பின் நல்ல சர்வீஸ், சொகுசான சவாரிக்கான அம்சங்கள் என்று எல்லா விதங்களில் நுகர்வோர் மனமறிந்து வடிவமைக்கப்பட்டுள்ளது ஃபீனிக்ஸ்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)