பதிவு செய்த நாள்
11 அக்2012
16:16

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த, 2011ம் ஆண்டு மார்ச் மாதம், இன்டிகா இவி2 என்ற காரை அறிமுகப்படுத்தியது. டீசல், பெட்ரோல், பெட்ரோல் - எல்.பி.ஜி., என மூன்று வகைகளில், இந்த கார் கிடைக்கிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட இன்டிகா இவி2 டீசல் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், காரின் விலையில், ரூ.23,000 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலை, டில்லியில், ரூ.4.01 லட்சத்தில் இருந்து, ரூ.4.87 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்த விலை மாறுபடும். இன்டிகா இவி2 டீசல் கார், ஒரு லிட்டருக்கு, 25 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், புகை மாசு கட்டுப்பாடு விதியான, பாரத் ஸ்டேஜ் 4 விதிக்கு உட்பட்டது. டீசல் காரில், 1,396 சிசி திறன் கொண்ட காமன் ரயில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் காரில், எம்பி எஃப்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|