நாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்புநாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ...
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
12:35

அண்மையில் சாம்சங் நிறுவனம் எஸ் 7562 என்ற பெயரில், கேலக்ஸி வரிசையில் ஒரு இரண்டு சிம் 3ஜி மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ5. இந்த மொபைல் நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 121.5x63.1x10.5 மிமீ.; எடை 120 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்ட இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 4 அங்குல திரை, 480 x 800 பிக்ஸெல் திறனுடன் டிஸ்பிளே காட்டுகிறது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம், மெமரியை 32 ஜிபியாக அதிகப்படுத்தலாம். இதன் உள் நினைவகம் 768 எம்பி ராம் மெமரி கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆக உள்ளது. நெட் வொர்க் செயல்பாட்டிற்கு எட்ஜ், வைபி, மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் கேமரா 5 எம்பி திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஒரு விஜிஏ கேமராவும் உள்ளது. நொடிக்கு 30 பிரேம் பதியும் வேகத்துடன் வீடியோ செயல்படுகிறது. இதன் சிப்செட் Qualcomm MSM7227A Snapdragon ஆகும். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார், காம்பஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. எச்.டி.எம்.எல். பிரவுசர் மற்றும் அடோப் பிளாஷ் தொகுப்பு பதிந்து கிடைக்கின்றன. டாகுமெண்ட் வியூவர் மூலம் பல்வேறு பார்மட்டில் உள்ள பைல்களைப் படிக்கலாம். ஆர்கனைசர் மற்றும் வாய்ஸ் மெமோ வசதிகள் தரப்பட்டுள்ளன.1500 mAh லித்தியம் அயன் பேட்டரி அதிக மின்சக்தி திறனை வழங்குகிறது. இதன் ரேடியோ அலை கதிர்வீச்சு விகிதம் 0.47 W/kg ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,000.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)