பதிவு செய்த நாள்
23 அக்2012
14:54
மும்பை : நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 5,376 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தொலைத்தொடர்பு, எண்ணெய் நிறுவனம் என்று பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான 2வது காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 5,376 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டை காட்டிலும் தற்போது லாபம் அதிகரித்த போதும், கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தை லாபத்தை ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.5,703 கோடியாக இருந்தது. அதேசமயம் இந்நிறுவனத்தின் விற்பனை கடந்தாண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 90,335 கோடியானது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை ரூ.78,569 கோடியாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|