பதிவு செய்த நாள்
13 நவ2012
02:08

புதுடில்லி: நடப்பு வேளாண் பருவத்தில், பருப்பு இறக்குமதி மீது, 10 சதவீத வரி விதிக்க வேண்டும் என,வேளாண் விலை கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.உள்நாட்டில் பருப்பு சாகுபடியை ஊக்குவித்து, இறக்குமதி செலவினங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பருப்பு இறக்குமதி மீது, 10 சதவீத வரி விதிப்பது அவசியம் என, இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த 2011-12ம் வேளாண் பருவத்தில், நம்நாடு, 8,767 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பருப்பு வகைகளை இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய வேளாண் பருவத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 16.4 சதவீதம் அதிகமாகும்.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லாததால், கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நம்நாடு ஒவ்வொரு ஆண்டும், 20-30 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2011-12ம் வேளாண் பருவத்தில், உள்நாட்டில், 1.70 கோடி டன் பருப்பு வகைகள், உற்பத்தியாயின. ஆனால், நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூலை-அக்டோபர்), காலம் தவறிய மழை பொழிவால்,பருப்பு வகைகள் உற்பத்தி, 52.60 லட்சம் டன்னாக குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு, இதே பருவத்தில், இவற்றின் உற்பத்தி, 61.60 லட்சம் டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|