பதிவு செய்த நாள்
13 நவ2012
02:09

உடுமலை: தமிழகத்தில், கறிக்கோழி விற்பனை தேக்கமடைந்து, விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.மூலப்பொருட்கள்தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கறிக்கோழி உற்பத்தி தொழில், பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் கறிக்கோழியில், 50 சதவீதம், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீவனம் உட்பட மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில், கறிக்கோழி மொத்த கொள்முதல் விலை, 65 முதல் 70 ரூபாய் வரை இருந்தது.
அதிர்ச்சிகடந்த ஒரு மாதமாக, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில், விற்பனை குறைவால் தேக்கமடைந்து, கறிக்கோழி விலை கடுமையாக சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, மொத்த கொள்முதல் விலையை பி.சி.சி.,(பிராய்லர் கோ-ஆர்டினேசன் கமிட்டி) கிலோவுக்கு 40 ரூபாயாக நிர்ணயம் செய்தது. திடீர் விலை வீழ்ச்சியால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உற்பத்தியாளர்கள் கூறியதாவது:தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்புக்கு, 70 ரூபாய் செலவாகிறது. ஆனால், மொத்த கொள்முதல் விலை 40 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை நீடித்தால், கடும் இழப்பு ஏற்படும். சில மாதங்களாக தொழிலில், தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் நாங்கள், விலையை சீராக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், சங்கிலித் தொடராக, இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர் உட்பட அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, தொழிலை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மொத்த கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்தாலும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிக்கன் கிடைப்பதில்லை. சில்லரை விற்பனை நிலையங்களில் கொள்முதல் விலைக்கு தகுந்தாற்போல் விலை குறைக்கப்படாமல், பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.மொத்த கொள்முதல் விலை நிலவரப்படி கழிவு, தோல் ஆகியவற்றை கழித்து, லாபத்தையும் கணக்கிட்டு, 90 முதல் 100 ரூபாய்க்கு விற்றாலே, சில்லரை விற்பனையாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பது கறிக்கோழி உற்பத்தியாளர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|