பதிவு செய்த நாள்
25 நவ2012
03:51

புதுடில்லி:
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், விற்பனை செய்யப்படும் "ரயில் நீர்'
என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் விலையை உயர்த்த, ரயில்வே அமைச்சகம்
ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் "ரயில் நீர்' விலை, 12 ரூபாயில் இருந்து,15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போன்று, 500 மி.லி., குடிநீரின் விலை, 8 ரூபாயில் இருந்து,10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.இந்த புதிய விலை உயர்வு விரைவில்
நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும்
ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரை, ரயில் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்திற்கு, சென்னை அருகே உள்ள பாலுர், டில்லியில் நங்லோய்,
பீகாரில் தனபூர் ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்
உள்ளன. இத்தொழிற்Œõலைகள், நாளொன்றுக்கு ஒரு லிட்டர் அளவிலான, குடிநீர்
அடைக்கப்பட்ட 3.80 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|