பதிவு செய்த நாள்
25 நவ2012
07:28

புதுடில்லி: வரும் 2015ம் ஆண்டில், கவரிங் நகைகளுக்கான சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என,"அசோசெம்' மதிப்பிட்டுள்ளது.தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தங்கத்தின் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 10 கிராம் தங்கத்தின் விலை, 3,000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ வெள்ளி விலை, 5,000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளன.எனவே, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்க முடியாதவர்கள், விலை குறைவான, கவரிங் நகைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.பல்வேறு வண்ணங்களில், அழகிய கலை நயங்களுடன் உருவாக்கப்படும் கவரிங் நகைகள், அதன் வகைகளுக்கு ஏற்ப, 100 ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இதனால், கவரிங் நகைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.தற்போது, இந்தியாவில், கவரிங் நகைகளுக்கான சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|