41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ விலை குறைப்பு41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ விலை குறைப்பு ... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நோக்கியா ஆஷா 205, ஆஷா 206 வெளியானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
16:18

இந்திய மொபைல் சந்தையில் நவம்பர் இறுதி வாரத்தில், நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை நோக்கியா ஆஷா 205 மற்றும் நோக்கியா ஆஷா 206. இதுவரை நோக்கியா 201 என்ற மொபைல் போன் தான், நோக்கியாவின் குறைந்த விலை போனாக இருந்து வருகிறது. இந்த இரண்டு போன்களும் அந்த வகையில், அதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆஷா வரிசையில் ஏறத்தாழ 10 போன்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மொபைல் போன்களும் இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றும் இரண்டு சிம்களை இயக்கும் வகைகளில் உள்ள இவற்றில், நம் தேவைக்கேற்ற மாடலைத் தேர்ந்தெடுத்து பெறலாம். இரண்டிலும் நோக்கியாவில் சிம்பியன் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.

நோக்கியா ஆஷா 205 போனின் திரை 2.4அங்குல அகலத்தில் QVGA டிஸ்பிளே திறனுடன் உள்ளது. எளிதாக டைப் செய்திட குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. பேஸ்புக் இணைய தளத்தினை நேரடியாகப் பெறத் தனி கீ தரப்பட்டுள்ளது. 0.3 திறன் கொண்ட விஜிஏ கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1000 முகவரிகளை இதில் சேமித்து வைக்கலாம். இதன் பரிமாணம் 113x61x13 மிமீ. எடை 94 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் இயக்க முடியும். எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் உள்ளன. தெளிவாக ஒலிக்கும் வகையில் லவுட் ஸ்பீக்கர் உள்ளது. 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 891 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. 11 மணி நேரம் தொடர்ந்து பேச இயலும்.

ஆஷா 206 மொபைல் போனில், வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. தடிமன் குறைவாக வடிவமைக்கப்பட்ட இந்த போனில், 1.3 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் மெமரியும் 10 எம்.பி. என்ற அளவில் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதன் பரிமாணம் 116x49.4x12.4 மிமீ. எடை 91 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
நோக்கியாவின் இந்த இரண்டு போன்களில் தான், முதன் முதலாக Slam எனப்படும் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோ, வீடியோ போன்ற மல்ட்டி மீடியா பைல்களை பக்கத்தில் உள்ள போன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

பெற்றுக் கொள்ளும் போனில் இந்த தொழில் நுட்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை. போன்களையும் இணையாக இருக்கும்படி செட் செய்திடத் தேவை இல்லை. இந்த இரண்டு போன்களிலும் Nokia Xpress Browser, Nokia Nearby, eBuddy instant messaging appஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இவை இரண்டும் இந்த மாதத்தில், இந்திய நகரங்கள் எங்கும் படிப்படியாக விற்பனைக்கு வெளியாகின்றன. முதலில் ஆஷா 205, அடுத்து 206 கிடைக்கும். பின்னர், இரண்டு சிம் ஆப்ஷனுடன் போன்கள் வெளி வரும். விலை ரூ.3,500 என்ற அளவில் இருக்கும். இந்த இரண்டு போன்களுடனும் 40 கேம்ஸ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 03,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 03,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)