பதிவு செய்த நாள்
11 டிச2012
23:37

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நவம்பர் மாத தொழில் துறை உற்பத்தி குறித்த எதிர்பார்ப்பால், பங்குச் வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைவாக இருந்தது. இதனால், பங்குச் சந்தை களில் வியாபாரம் சற்று சரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஒரு சில ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 22.55 புள்ளிகள் சரிவடைந்து, 19,387.14 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,612.18 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,285.29 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., ஹிண்டால்கோ, கோல் இந்தியா உள்ளிட்ட 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஜிந்தால் ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, எச்.யு.எல்., உள்ளிட்ட 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 10.10 புள்ளிகள் குறைந்து, 5,898.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,965.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,865.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|