தொடர் சரிவில் தங்கம் விலைதொடர் சரிவில் தங்கம் விலை ... தாவர எண்ணெய் இறக்குமதி 7 லட்சம் டன்னாக குறைவு தாவர எண்ணெய் இறக்குமதி 7 லட்சம் டன்னாக குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஐரோப்பிய இறக்குமதி கார்கள் விலை குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2012
15:40

ஐரோப்பிய நாடுகளில் உள்ள, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்கள், இந்தியாவிலும் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. எனினும், சில மாடல் கார்களை, வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, முழுமையான காராக, இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, விற்பனை செய்கின்றன. இவ்வகை கார்களை, "கம்ப்ளிட்லி பில்ட் யூனிட்(சி.பி.யூ.,)' என்று அழைக்கின்றனர். 2012-13 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், இவ்வகை கார்கள் மீதான சுங்க வரி, 60 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதாவது, ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட, 3,000 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல் கார்கள் மற்றும் 2,500 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட டீஸல் கார்களுக்கு, கூடுதலாக, 15 சதவீதம் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான, வர்த்தக உடன்பாட்டின் கீழ், பெரிய கார்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஐரோப்பிய நாடுகளில் இருந்து எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்( சியாம்), இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் முதலீடு செய்துள்ள கார் நிறுவனங்களுக்கு, இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும். வேலை வாய்ப்பும் குறையும் என்று, "சியாம்' அமைப்பு கூறி
வருகிறது. இந்த சூழ்நிலையில், டில்லியில் சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய, மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், "ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, இந்திய - ஐரோப்பிய யூனியன் வர்த்தக உடன்பாட்டின் கீழ், வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, எனது அமைச்சகம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது. எனினும், இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கையே அமலுக்கு வரும். அதே நேரத்தில், இந்த விஷயத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டில், இதுவரை எந்த மாற்றமும் இல்லை' என்று குறிப்பிட்டார். அமைச்சர் பிரஃபுல் பட்டேல் கூறியதன் மூலம், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், சொகுசு கார்கள் மீதான வரி, வரும் காலத்தில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வகை கார்களின் விலையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)