பதிவு செய்த நாள்
17 டிச2012
23:52

புதுடில்லி :நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட, 7.5 சதவீதம் குறைந்து, 3,600 கோடி டாலராக (1.98 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்காபொறியியல் சாதனங்களின் கீழ், போக்குவரத்து உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், வார்ப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.நடப்பு நிதியாண்டிற்கான முதல் மதிப்பீட்டில், 7,200 கோடி டாலர் மதிப்பிற்கு, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்பு, 6,000 கோடி டாலராக (3.30 லட்சம் கோடி ரூபாய்) குறைக்கப்பட்டது.பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள, மேற்கண்ட நாடுகளில், இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால், இப்பிரிவில், இந்தியாவின் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 5,200 கோடி டாலர் முதல், 5,500 கோடி டாலர் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.குறைவுசென்ற, 2011 - 12ம் நிதியாண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 5,820 கோடி டாலராக அதிகரித்திருந்தது. இது, முந்தைய, 2010 - 11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (4,970 கோடி டாலர்) விட, 17 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டின், முதல் எட்டு மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 5.95 சதவீதம் குறைந்து, 18,920 கோடி டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|