பதிவு செய்த நாள்
19 டிச2012
16:00

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், கார்கள் மற்றும் எஸ்.யு.வி., கார்களுக்கு பெயர் பெற்றது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த, கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனத்தை, வாங்கி, இருசக்கர வாகன சந்தையிலும், மஹிந்திரா நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், நுழைந்தது. துவக்கத்தில், இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய, மோட்டார் சைக்கிள், "ஸ்டாலியோ 110'. ஆனால், கியர் பிரச்னையால், இந்த பைக்குக்கு, மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இந்த சூழ்நிலையில், வரும் ஜனவரி மாதம், "ஸ்டாலியோ 110' பைக்கை மேம்படுத்தி, புதிய பெயரில், மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்குக்கு," பாந்திரோ 110' என்று பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்யும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு, "ஓ' என்ற உச்சரிப்புடன் முடியும் வகையில் தான், பெயர்கள் சூட்டப்படும். அந்த வகையில்,"பாந்திரோ 110' பெயரும் சூட்டப்பட்டுள்ளது. "ஸ்டாலியோ 110' பைக்கில் இருந்த, 110 சிசி, போர் ஸ்ட்ரோக் இன்ஜின் தான், புதிய பைக்கிலும் இடம் பெற உள்ளது. இந்த பைக், 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், "ஸ்பெலண்டர்', ஹோண்டா நிறுவனத்தின், "டிரீம் யுகா', சுசூகி நிறுவனத்தின், "ஹயாதி' ஆகிய பைக்குகளுக்கு, மஹிந்திராவின் புதிய பைக்கான, "பாந்திரோ 110' கடும் போட்டியை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, இந்த ஆண்டு துவக்கத்தில், டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், மஹிந்திரா நிறுவனத்தால் காட்சிக்கு வைக்கப்பட்ட, "மோஜோ 300' பைக்கும், அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|