பதிவு செய்த நாள்
21 டிச2012
15:14
உலக அளவில், விலை அதிகமான சொகுசு கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனையில், முன்னணியில் உள்ள, ஜெர்மனியை சேர்ந்த, பி.எம்.டபிள்யூ., கார்
நிறுவனம், இந்தியாவிலும், பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இத்துடன், "பி.எம்.டபிள்யூ., பிரிமியம் செலக்ஷன்' என்ற பெயரில், பழைய கார்கள்
விற்பனை சந்தையிலும், தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில், குர்கான், புனே, மும்பை, லூதியானா, சென்னை, பெங்களூரு, மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள, பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின், அதிகாரப்பூர்வ டீலர்கள், பழைய கார்களை கொள்முதல் செய்வர். பின்னர், குர்கானில், "பேர்ட் ஆட்டோமோடிவ்', தெற்கு மும்பையில்,
இன்ஃபினிட்டி கார்ஸ்', புனேயில், "பவாரியா மோட்டார்ஸ்', லூதியானாவில்,கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ்', பெங்களூருவில், நவ்னீத் மோட்டார்ஸ்', சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில், "குன் எக்ஸ்க்ளூஸிவ்' ஆகிய பெயர்களில் இயங்கும், தேர்வு செய்யப்பட்ட டீலர்கள் மூலம், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்.
பழைய கார்களில், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பழுதுகள், பராமரிப்பு விவரம், சர்வீஸ் விவரம், கார் உரிமையாளர் குறித்த விவரம், போன்ற அனைத்து விஷயங்
களும், வாடிக்கையாளர்களுக்கு தரப்படும். காரின் தற்போதைய நிலவரம், அதன் தரம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். பழைய கார்கள் விஷயத்தில், முதல் முறையாக விலைக்கு வாங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் மற்றும், 1.20 லட்சம் கி.மீ.,க்குள் பயன்படுத்தப்பட்டது போன்ற விஷயத்தில், பி.எம்.டபிள்யூ., நிறுவனம் மிகவும் கவனத்துடன் உள்ளது. இதுதவிர, பழைய கார்களை வாங்க, சுலபமான மாத தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், நிதியுதவி வசதியும், பி.எம். டபிள்யூ., நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|