தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... அன்னிய நேரடி முதலீடு ரூ.10,670 கோடியாக வளர்ச்சி அன்னிய நேரடி முதலீடு ரூ.10,670 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
15:37

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண்டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவாரஸ்யமான உண்மையாகும். ஃபோர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தியில் முன்னோடியான இந்நிறுவனத்தின் சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச்சிறப்பு. உறுதியான கட்டுமானத்திற்கும் சிறந்த செயல்திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவனத்துடன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும். புதுப்புது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அதிக செயல்திறன், புதுப்புது மாடல்கள், மேன்மேலும் மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிகக் குறைவான வாகனப்புகை என்பது போன்ற பல சிறப்புக்களை உள்ளடக்கி கொண்டது லாண்ட்ரோவர், ரேஞ்ச் ரோவர் வாகனங்கள்.ரேஞ்ச் ரோவர் கார்களின் வெற்றியை தொடர்ந்து தான் மற்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் எஸ்யுவி (SUV) தயாரிப்பில் அதிகளவில் நுழைந்தன என்றால் மிகையல்ல.
லாண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்திற்கு வடக்கே நான்கு, கிழக்கே ஒன்று, மேற்கே ஐந்து மற்றும் தெற்கே நான்கு என்று நாடு முழுவதிலும் பதினான்கு டீலர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் லாண்ட்ரோவர் கார்கள் ஐந்து மாடல்களில் கிடைக்கின்றன. அவை முறை‌யே ஃப்ரீலாண்டர் 2, ரேஞ்ச் ரோவர் இவோக், டிஸ்கவரி, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகும். இவற்றில் குறைந்த விலைக்கொண்டது ஃப்ரீலாண்டர் 2 மற்றும் அதிக விலைக்கொண்டது ரேஞ்ச் ரோவர்.
ஃப்ரிலாண்டர் 2
லாண்ட்ரோவரின் மிக சொகுசான எஸ்யுவியான ஃப்ரிலாண்டர் 2 பார்க்க மிகவும் கம்பீரமாகவும் வேகமான முரட்டு பயணத்திற்கு தயார் என்று ‌சொல்வது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதன் முன் மற்றும் பின்புறம் உயர்ந்து க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம் என்பதால் எப்படிப்பட்ட கரடுமுரடான சாலைக்கும் ஏற்ற வாகனமாக விளங்குகிறது. ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டிருக்கும். இது யூரோ என்காப் (EURO) க்ராஷ் டெஸ்டில் உயர்ந்த தேர்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பித்தக்கது. 7 ஏர்பேக்குகளுடன் பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பளிக்கிறது. ஃப்ரீலாண்டர் 2. இதில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ப்ரீசெட் செட்டிங், பொதுவான சாலை, புல், சரளைக்கல் சாலை மற்றும் பனி படர்ந்த சாலை, குண்டும் குழி
யுமான சாலை மற்றும் மணற்பரப்பிற்கு ஏற்ற வகையில் செட் செய்துவிட்டால் அதற்கேற்ப த்ராட்டல் மற்றும் கியர்பாக்ஸை கட்டுப்படுத்தி எம்மாதிரி சாலைக்கும் ஏற்ப பயணத்தை சுலபமாக்குகிறது. இதன் என்ஜின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. மோதல்களின் ஆபத்தை போக்கவும், முன்புற அழகான வடிவமைப்பிற்கும் வழிவகுக்கிறது. ஃப்ரீலாண்டர் 2 TD4-SE மற்றும் SD4-HSE என்ற 2 வேரியண்ட்டில் கிடைக்கிறது.

ரேஞ்ச்ரோவர் இவோக்
ரேஞ்ச்ரோவர் இவோக் மிகவும் நீண்ட ஒல்லியான நளினமான தோற்றத்துடன் ஐந்து கதவுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல்திறனுடனும் எரிபொருள் சிக்கனத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மூன்று மாடல்களான ப்யூர், ப்ரஸ்டீஜ் மற்றும் டைனமிக் என்று வெளிவருகிறது. 190PS SD4 டீசல் என்ஜின் அதிக பவரை குறைவான மற்றும் நடுத்தர ஆர்பிஎம்மில் வழங்குகிறது. இதன் நவீன பவர் ட்ரெயின் டெக்னாலஜி சிறந்த செயல் திறனுடன் எரிபொருள் சிக்கனத்தையும் மிகக் குறைவான புகை மற்றும் கரியமிலவாயு வெளியீட்டை கொண்டுள்ளது. குறிப்பிட வேண்டிய அம்சமாகும். 6 ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷனுடன் அதிகபட்Œ வேகமாக 195கிலோமீட்டர் மணிக்கு என்றும் 0 -100 கிமீ/மணிக்கு என்ற ஆக்சில்ரேஷனை 8.5 வினாடியில் அடைவதும் ரேஞ்ச் ரோவர் இவோக்கில் காணப்படுகிறது. சக்தி வாய்ந்த "ஆல் டிஸ்க்' ப்ரேக்கிங் சிஸ்டம், நவீன "ஆக்டீவ் எலக்ட்ரானிக் சேஃப்டி சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட ட்ராக்ஷன் மற்றும் ஸ்டெபிலிட்டி டெக்னாலஜி போன்றவை இதனை பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததாக்குகிறது.
டிஸ்வகரி 4 SE
பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள டிஸ்வகரி 4 SE ஏழு பேர் அமரக்கூடிய வகையிலும் பொருட்கள் வைக்க நிறைய இடம் கொண்டதாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. 3.0 லிட்டர் டீŒல் என்ஜின் கொண்டு 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கமான்ட்ஷிஃப்ட் கொண்டுள்ள இதில் ஓட்டுனரின் கைவண்ணத்திற்கும், பயணத்தின் தேவைக்கும் ஏற்ப தானாகவே மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. இதனால் கியர் மாற்றுவது மிகச்சிறப்பாகவும், எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்குகிறது. க்ரூபிஸ் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் விண்டோ ஓட்டுனரின் விரல் நுணியில் திறக்கக் கூடியதாகவும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் வீலில் லெதர் உறையுடனும், பொருட்கள் வைக்க தனி ஷெல்ஃபுடனும், எலக்ட்ரிக் Œன்ரூஃப் என்ற மேற்கூரை திறக்கும் வசதியுடனும், நம் உணர்விற்கேற்ப வெளிச்சத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய விளக்குகளும், பின்புற ஏசியும் கொண்டு சொகுசான
உள் அலங்கார அமைப்பை பெற்றுள்ளது டிஸ்கவரி 4 SE மூன்று அடுக்குகள் கொண்ட இந்த மாடல் இந்திய குடும்பங்களுக்கேற்ற சிறப்பான வாகனமாகும்.
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SE
கம்பீரமான தோற்றமும், உறுதியான கட்டமைப்பும் கொண்ட ஸ்போர்டியான ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SE புதிய பலவித மெட்டாலிக் நிறங்களில் அழகிய அலாய் வீலுடன் வெளிவருகிறது.சொகுசான லெதர் சீட்டுகள், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் ஓட்டுனர் மற்றும் முன்புற இருக்கைகள், சிறந்த ஆடியோ சிஸ்டம் போர்டபிள் ஆடியோ இன்டாஃபேசுடன் ஐபாட் மற்றும் எம்பி3 ஏற்றதாக உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் சொகுசான மகிழ்ச்சியான பயணத்திற்கு வழிவகுக்கிறது.
"டெவரன் ரெஸ்பான்ஸ்' என்ற தொழில் நுட்பத்தின் மூலம் மலையேற்றத்திற்கு பாதுகாப்பாக எளிதாக இருப்பதும், "க்ரேடியன்ட்' ஆக்சிலரேஷன் கண்ட்ரோல்' எம்மாதிரி சாலைகளிலும் கஷ்டமின்றி செல்ல உதவுவதும் இதன் சிறப்பம்சமாகும். சுற்றுச்சூழலைக் காக்கும் பொருப்பாக "A டெரைன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பத்தின் மூலம் கரியமிலவாயு வெளியீட்டை பெருமளவு குறைத்து சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த உதவுகிறது. இத்தொழில்நுட்பம் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் மட்டுமின்றி லாண்ட்ரோவரின் மற்ற மாடல்களிலும் உள்ளது.
ரேஞ்ச் ரோவர் லோக் SE
மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது ரேஞ்ச் ரோவர் லோக் SE மாடல், அட்லஸ் மற்றும் டார்க் அட்லஸ் இணைந்த முன்புற க்ரில், பாடிகலர் கொண்ட பம்பர், நோபல் ப்ளேட் கொண்ட மேல் மற்றும் கீழ்புற டோர் ஹாண்டில் கோடுகள் அற்ற சுத்தமான தோற்றத்தைக் கொடுப்பது, 20 அங்குல 5 ஸ்பிலிட் ஸ்போக் கொண்ட வீல்கள் மற்றும் இதன் அழகான நிறங்கள் போன்றவை இதன் வெளிப்புற தோற்றத்தை பிரமிப்பாக்குகிறது. ரேஞ்ச் ரோவர் வோக் SE இன் செமி அனிலைன் லெதர் சீட்கள், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணியின் இருக்கைகளுக்கான மெமரி, 825வாட் சவுண்ட்
சிஸ்டம் தரமான இசையை வழங்குவது, கன்ரோல் கூலர், ட்வின் ப்ளேட் சன் வைசர், "ஆட்டோ டிம்மிங்' உட்புற கண்ணாடி, சீட்களின் நிறம், எக்ஸிக்யூட்டிவ் சீட் ஸ்டைல் போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி போன்றவை இதன் உட்புற சொகுசு அம்சங்களுக்கு சான்றாகும். இதன் LR-SDV8 டீசல் என்ஜின் சக்தி வாய்ந்த பவரை 230KW முதல் 250KW வரை 700NM டார்க்குடன் வழங்குகிறது. இதன் "பாரலல் சீக்வென்ஷியல்' டர்போ சார்ஜிங் சீரான பவரையும் சிறப்பான செயல்திறனையும் தொடர்ந்து
அளிக்கிறது. மேலும் இதன் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஸ்மூத்தான சுலபமான பயணத்தையும் ஓட்டும் அனுபவத்தையும் வழங்குகிறது.
உலகத்தரமான சிறந்த நவீன தொழில்நுட்ப உத்திகளும், சொகுசான வசதியான பலவித அம்சங்களும், பெருமை மிகுந்த நளினமான கம்பீரமான தோற்றங்களுடனும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டு வெளிவரும் லாண்ட்ரோவர் வாகனங்கள் அனைத்துமே உரிமையாளரின் அந்தஸ்த்தையும் பெருமையையும் உயர்த்தக்கூடியது என்றால் மிகையல்ல.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)