பதிவு செய்த நாள்
28 டிச2012
16:28
இத்தாலி நாட்டை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம், இந்தியாவில், "ஃபியட் குரூப் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்-(எஃப்.ஜி. ஏ.ஐ.பி.எல்.,)' என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில், லினியா, புன்டோ உள்ளிட்ட பல மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே, ரஞ்சன்கான் என்ற இடத்தில், ஃபியட் கார் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், ஃபியட் கார்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய, ஃபியட் நிறுவனம் பல்வேறு, விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, இந்தியா முழுவதும்< உள்ள, ஃபியட் கார் உரிமையாளர்களை, தனது கார் தொழிற்சாலைக்கு நேரில் அழைத்து, ஃபியட் கார் உற்பத்தி, எப்படி நடக்கிறது என்பதை விளக்க திட்டமிட்டது. அதன்படி, மும்பை, டில்லி, சூரத், இந்தூர், பெங்களூரு, ஹைதராபாத், மங்களூரு, கோவா, சென்னை, ராய்பூர், டேராடூன், உடுப்பி, கோவை, திருவனந்தபுரம் மற்றும் புனே ஆகிய நகரங்களில், வசிக்கும், ஃபியட் கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டிசம்பர், 14ம் தேதி, அனைத்து ஃபியட் கார் உரிமையாளர்களும், இந்த அழைப்பை ஏற்று, புனே அருகே, ரஞ்சன்கான் என்ற இடத்தில் உள்ள ஃபியட் கார் தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தனர். ஃபியட் கார் தயாரிப்பு குறித்த, அனைத்து விஷயங்களும், ஃபியட் கார் உரிமையாளர்களுக்கு, விளக்கி கூறப்பட்டது. ஃபியட் கார் உரிமையாளர்களுக்கு, ஃபியட் நிறுவனம் மீது நம்பிக்கை மற்றும் மரியாதையை ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|