கிழக்கு கடலோர துறைமுகங்களில் பெருகும் முதலீடு:வர்த்தகம் வளர வளமான வாய்ப்புகிழக்கு கடலோர துறைமுகங்களில் பெருகும் முதலீடு:வர்த்தகம் வளர வளமான ... ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் கேன்வாஸ் 2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
09:59

தன்னுடைய சூப்பர்போன் கேன்வாஸ் ஏ 100, மக்களிடையே வெற்றி பெற்றதை அடுத்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூப்பர் போன் கேன்வாஸ் 2 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே 5 அங்குல கெபாசிடிவ் தொடு திரையுடன் உள்ள இந்த போனில், டூயல் கோர் சிபியு தரப்பட்டுள்ளது. விலை அதே முந்தைய போனின் விலைதான். இதனுடைய வடிவமைப்பு காலக்ஸி நெக்சஸ் போனை ஞாபகப்படுத்துகிறது. வழக்கம் போல சற்று எடை அதிகமாகவும், தடிமன் கூடுதலாகவும் உள்ளது. 147x76.5x9.7 மிமீ என்ற அளவில் இதன் பரிமாணம் உள்ளது.
வழக்கமான இன்டர்பேஸ் மற்றும் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. இரண்டு சிம்களை நம் இஷ்டப்படி நிர்வகிக்க முடிகிறது. இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. அழைப்பு, இன்டர்நெட், மெசேஜ் என நாம் விரும்புபவற்றை, ஒரு சிம் கார்டுக்கென ஒதுக்கலாம். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் அமைத்து, அப்போது போனை அணைத்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் உள் நினைவகம் 4 ஜிபி.இதனை ஸ்மார்ட் கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எம்பி 4 பைல்கள் சிறப்பாக இயக்கப்படுகின்றன.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம்.ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. 3ஜி வசதி இருந்தாலும், அலைவரிசை ஒதுக்கீட்டினால், உலகின் சில நாடுகளில் இதனைப் பயன்படுத்த முடியாது. வைபி, புளுடூத், யு.எஸ்.பி. ப்ளக் அண்ட் பிளே ஆகிய வசதிகள் உள்ளன. பிளே ஸ்டோர், எம் ஸ்டோர், எம் ஸோன் ஆகியவை சப்போர்ட் செய்யப்படுகின்றன. டாகுமெண்ட் வியூவர், ஆர்கனைசர், கூகுள் சர்ச் மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப், காலண்டர், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் சிறப்பான அம்சம், ஆட்டோ போகஸ் மற்றும் 8 எம்.பி திறனுடன் இயங்கும் கேமராதான். டூயல் எல்.இ.டி. பிளாஷ் இயங்குகிறது. வீடியோ பதிவும் சிறப்பாக உள்ளது. இதன் 2000mAh பேட்டரி திறன் கொண்டது. தொடர்ந்து 180 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. 5 மணி நேரம் தொடர்ந்து பேச பயன்படுத்த முடிகிறது. இதன் கதிர்வீச்சு வேகம் 0.68 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)