"செயில்' நிறுவனம்உருக்கு உற்பத்தி 2 சதவீதம் உயர்வு"செயில்' நிறுவனம்உருக்கு உற்பத்தி 2 சதவீதம் உயர்வு ... அன்னிய நேரடி முதலீடு14 திட்டங்களுக்கு அனுமதி அன்னிய நேரடி முதலீடு14 திட்டங்களுக்கு அனுமதி ...
தனியார் பங்கு முதலீட்டில் தென் மாநிலங்கள் முன்னிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2013
00:18

சென்ற 2012ம் ஆண்டில், தனியார் பங்கு முதலீட்டை அதிகளவில் கவர்ந்ததில், தென் மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன என, வென்சர்ஸ் இன்டலிஜன்ஸ் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
பெங்களூரு:மதிப்பீட்டு ஆண்டில், தென்மாநில நிறுவனங்கள், 162 ஒப்பந்தங்கள் வாயிலாக, 246 கோடி டாலரை (13,470 கோடி ரூபாய்) திரட்டி முன்னிலையில் உள்ளன.குறிப்பாக, பெங்களூரைச் சேர்ந்த நிறுவனங்கள், 88 ஒப்பந்தங்கள் வாயிலாக, 117 கோடி டாலரை (6,435 கோடி ரூபாய்) திரட்டி முதலிடத்தை பிடித்துள்ளன.
ஆரோக்கிய பராமரிப்பு:தென்மாநில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில், தனியார் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம், அதிக மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை கவர்ந்ததில், ஆரோக்கிய பராமரிப்பு துறை முதலிடத்தில் உள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற 2012ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், இந்தியா வேல்யூ பண்டு என்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம், பெங்களூரைச் சேர்ந்த மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில், 18 கோடி டாலரை (990 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது.
இதையடுத்து, ஐதராபாத்தைச் சேர்ந்த, "கேர்' ஹாஸ்பிட்டல் குழுமத்தில், அட்வென்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், 11 கோடி டாலரையும், கொச்சியைச் சேர்ந்த டி.எம்.ஹெல்த் கேர் நிறுவனத்தில், ஒலிம்பஸ் கேப்பிட்டல் நிறுவனம், 10 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
தமிழகத்தில் ஆரோக்கிய பராமரிப்பு துறையில் ஈடுபட்டு வரும், திருச்சியைச் சேர்ந்த வாசன் ஐ கேர் நிறுவனம், சென்ற ஆண்டு, மார்ச் மாதத்தில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜி.ஐ.சி.,-யிடமிருந்து, 10 கோடி டாலரை (550 கோடி ரூபாய்) திரட்டிக் கொண்டது.
பொருளாதார சுணக்க நிலையால், பாதிப்படையாத துறைகளில் ஒன்றாக ஆரோக்கிய பராமரிப்பு துறை விளங்குகிறது. இதன் காரணமாகவே, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், சென்ற ஆண்டில் அதிக அளவிலான தனியார் பங்கு முதலீட்டை திரட்டிக் கொண்டுள்ளன என, வென்சர் இன்டலிஜன்ஸ் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் அருண் நடராஜன் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான டிரிவிட்ரான் ஹெல்த்கேர், பிடிலிட்டி குரோத் பார்ட்னர் என்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்திடமிருந்து, 7.50 கோடி டாலரை திரட்டிக் கொண்டுள்ளது. இதே போன்று, பெங்களூரைச் சேர்ந்த அவெஸ்தாஜென் நிறுவனம், 6 கோடி டாலரையும், நோவா மெடிக்கல் சென்டர்ஸ், 5.40 கோடி டாலரையும் திரட்டிக் கொண்டுள்ளன.
டி.வி.எஸ்., நிறுவனம் :பொறியியல் துறையை பொறுத்தமட்டில், பெங்களூரைச் சேர்ந்த நந்தி இக்னாமிக் காரிடார் எண்டர் பிரைசஸ், 6.50 கோடி டாலரையும், மதுரையைச் சேர்ந்த டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் நிறுவனம், 5.30 கோடி டாலரையும் திரட்டிக் கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)