பதிவு செய்த நாள்
12 ஜன2013
15:26
இந்தியாவில் ஹாலிவுட் படங்களை திரையிடுவதில் முன்னணியில் நிற்கிறது சோனி நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 12 ஹாலிவுட் படங்களை இந்தியாவில் திரையிட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை திரையிட்டதன் மூலம் சுமார் ரூ.217 கோடியை வசூலித்துள்ளது. இதில் 2 படங்கள் அந்த நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. "தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி" படம் வெளியான முதல் வாரத்திலேயே 34 கோடி வசூல் செய்தது சாதனை அளவாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படமான "ஸ்கைபால்" முதல் வாரத்தில் 27.4 கோடி வசூலித்தது. கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் 50 சதவிகிதம் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டி ஜங்கிள் அன்செயின்டு, ஆப்டர் எர்த், ஒயிட் ஹவுஸ் டவுன், எலிசியம், கேப்டன் பிலிப்ஸ், ஈவில் டெத், க்ரோன் அப்ஸ்&2, தி ஸ்மர்ப்ஸ் ஆகிய படங்களை திரையிட இருக்கிறது சோனி நிறுவனம். சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|