பதிவு செய்த நாள்
31 ஜன2013
10:08

சென்னை: கரூரில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் சார்பில், 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, புதிய சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தை, முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்டம், காகிதபுரத்தில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து, நாளொன்றுக்கு, 600 டன் சிமென்ட் உற்பத்தியாகும். காகித நிறுவனத்தில் உருவாகும், சுண்ணாம்புக் கழிவு மற்றும் நிறுவனத்தில் அமைந்துள்ள, மின் உற்பத்தி நிலையத்தின் உலர் சாம்பல் ஆகியவற்றை, மூலப்பொருட்களாக கொண்டு, காகித நிறுவனத்தால் அமைக்கப்படும், இந்தியாவின் முதல் சிமென்ட் தொழிற்சாலை இது. இந்த புதிய தொழிற்சாலையின் மூலம், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காகித நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள, இந்த சிமென்ட் தொழிற்சாலையை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். செய்தித்தாள் நிறுவனம், 2011 - 12ம் ஆண்டில், 109 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதில், தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான, 12 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதாவிடம், தொழில்துறை அமைச்சர், தங்கமணி வழங்கினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|