தேயிலை சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாக உயரும்தேயிலை சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாக உயரும் ... தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.6 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.6 சதவீதமாக சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இயற்கை ரப்பர் உற்பத்தி 97 ஆயிரம் டன்னாக வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2013
00:41

புதுடில்லி: நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், நாட்டின், இயற்கை ரப்பர் உற்பத்தி, 97 ஆயிரம் டன்னாக குறைந்து உள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (1.02 லட்சம் டன்) விட, 5 சதவீதம் குறைவாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. கணக்கீட்டு மாதத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 9 சதவீதம் சரிவடைந்து, 82,535 டன்னிலிருந்து, 75 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இதன் இறக்குமதி, 18 சதவீதம் உயர்ந்து, 23,672 டன்னிலிருந்து, 28,905 டன்னாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி, ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 967 டன்னிலிருந்து, 4,850 டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 7.90 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இதன் பயன்பாடு, 8.01 லட்சம் டன்னில் இருந்து, 8.17 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.65 லட்சம் டன்னிலிருந்து, 1.97 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இதன் ஏற்றுமதி, 23,730 டன்னிலிருந்து, 15,632 டன்னாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)