பதிவு செய்த நாள்
13 பிப்2013
00:43
புதுடில்லி: சென்ற 2012ம் ஆண்டில், சர்வதேச காபி ஏற்றுமதி, சாதனை அளவாக, 11.30 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை = 60 கிலோ) அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (10.45 கோடி மூட்டைகள்) விட, 8.2 சதவீதம் அதிகமாகும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில்
மதிப்பீட்டு காலத்தில், ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி, 24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.75 கோடி மூட்டைகளில் இருந்து, 4.66 கோடி மூட்டைகளாக உயர்ந்துள்ளது.அதேசமயம், அரபிகா வகை காபி ஏற்றுமதி, 6.70 கோடி மூட்டைகளில் இருந்து, 6.65 மூட்டைகளாகக் குறைந்துள்ளது.இந்தியாவின் காபி ஏற்றுமதி, 9.4 சதவீதம் குறைந்து, 52.80 லட்சம் மூட்டைகளாகக் குறைந்துள்ளது. பிரேசிலின் காபி ஏற்றுமதி, 15 சதவீதம் சரிவடைந்து, 2.82 கோடி மூட்டைகளாகவும், கொலம்பியா நாட்டின் காபி ஏற்றுமதி, 7.5 சதவீதம் குறைந்து, 77.70 கோடி மூட்டைகளில் இருந்து, 71.60 கோடி மூட்டைகளாகவும் குறைந்துள்ளன. அதேசமயம், வியட்னாமின் காபி ஏற்றுமதி, 1.76 கோடி மூட்டை என்ற அளவில் இருந்து, 2.54 கோடி மூட்டைகளாகவும், இந்தோனேஷியாவின் ஏற்றுமதி, 72 சதவீதம் வளர்ச்சி கண்டு, 61.50 லட்சம் மூட்டைகளில் இருந்து, 1.06 கோடி மூட்டைகளாகவும் அதிகரித்துள்ளன.
சர்வதேச உற்பத்தி
நடப்பு 2012 - 13ம் பருவத்தில், சர்வதேச அளவில், காபி உற்பத்தி, 14.40 கோடி மூட்டைகளாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தில், 13.45 கோடி மூட்டை என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|