பதிவு செய்த நாள்
14 பிப்2013
14:41

இந்தியாவில், யுடிலிட்டி வெகிக்கிள் கார் விற்பனை சந்தையில், மஹிந்திரா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின், எக்ஸ்யுவி500 காருக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. டபிள்யூ6 எப்டபிள்யூடி(பிரென்ட் வீல் டிரைவ்), டபிள்யூ8 எப்டபிள்யூடி (பிரென்ட் வீல்டிரைவ்), டபிள்யூ8 ஏடபிள்யூடி (ஆல் வீல் டிரைவ்) என்ற, மூன்று வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. இதில், டபிள்யூ6 எப்டபிள்யூடி வேரியன்ட் காரின் விலை, ரூ.11.8 லட்சம்; டபிள் யூ8 ஏடபிள்யூடி வேரியன்ட் கார் விலை, ரூ.14.43 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி).இதுவரை, ஆறு வண்ணங்களில் தான், எக்ஸ்யூவி500 கார் கிடைத்து வந்தது. தற்போது, 'ஆர்டிக் புளூ' என்ற புதிய, நீல நிற வண்ணத்திலும், இந்த கார் கிடைக்கிறது. பிப்ரவரி, 7ம் தேதி முதல், புதிய வண்ணத்தில் எக்ஸ்யூவி500 கார் விற்பனைக்கு வந்துள்ளதாக, மஹிந்திரா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|